founder-image periyar-image

Our Photo Galleries

← View All Recent Events

சட்டமன்ற நாயகர் கலைஞர் – கருத்தரங்கம் சட்டமன்ற நாயகர் கலைஞர் – கருத்தரங்கம்

College Functions
Held On: 21-12-2023
Description :

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - 21.12.2023 சட்டமன்ற நாயகர் கலைஞர் - கருத்தரங்கம் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் நடைபெற்றது. கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு அரசின் தலைமைக் கொறடா மாண்புமிகு கோவி. செழியன் அவர்கள் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஏ ஜி வெங்கடாசலம் ஈரோடு மாநகராட்சித் துணை மேயர் வணக்கத்திற்குரிய செல்வராஜ் தமிழ்நாடு அரசின் சட்டமன்ற கூடுதல் செயலர், இணைச் செயலர், துணைச் செயலர்கள் அந்தியூர் பவானி வட்டாட்சியர்கள், ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் ஈரோடு மாநகர் சுப்பிரமணியம் மாணவரணி அமைப்பாளர் திருவாசகம் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் பாதுகாவலரும் கோவை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநருமான திருமதி வெ கலைச்செல்வி கல்லூரி முதல்வர் முனைவர் ப கமலக்கண்ணன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவியர்கள் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. கல்லூரி முதல்வர் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார் சட்டமன்றக் கூடுதல் செயலர் முன்னிலை உரையாற்றினார். பிறகு, 1. பா.கார்த்தி - இரண்டாம் ஆண்டு இளங்கலை விலங்கியல் " மகளிர் மாண்பு காத்த கலைஞர் " 2.கே.கெளதம் - முதலாம் ஆண்டு இளங்கலை வரலாறு "ஓய்வில்லாச் சூரியன் " 3.கு. மைதிலி இரண்டாம் ஆண்டு இளங்கலைத் தமிழ் இலக்கியம் "கலைஞர்- பகுத்தறிவு சிந்தனைச் செம்மல்" 4.சி. பூமிகா - முதலாம் ஆண்டு இளங்கலை வரலாறு "கலைஞரின் திரை வாழ்வு " 5.மு. ஐயம்மாள் முதலாம் ஆண்டு இளங்கலைத் தமிழ் இலக்கியம் "கலைஞரின் சீர்த்திருத்தங்கள்" போன்ற பொருண்மைகளில் கல்லூரி மாணவர்கள் உரையாற்றினர். சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் பாதுகாவலர், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர், மாநகரம் சுப்பிரமணியம், மாணவரணி அமைப்பாளர் திருவாசகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதன் பிறகு, சிறப்பு விருந்தினர் - தமிழ்நாடு அரசின் தலைமைக் கொறடா மாண்புமிகு கோவி. செழியன் அவர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் குறித்துச் சிறப்புரையாற்றினார். கலைஞரின் சீர்திருத்தங்கள் குறித்தும் அவருடைய சொல் வன்மை குறித்தும் பார்வையாளர்கள் மனம் கொள்ளும்படி மிக அழகாக உரை வழங்கினார். அதன் பிறகு எம் கல்லூரி மாணவர்களின் உரை குறித்துப் பேசும்போது, "மற்ற கல்லூரிகளில் மாணவர்கள் பேசினார்கள்; உங்களுடைய கல்லூரியில் தலைவர்கள் பேசினார்கள்" என்று தம்முடைய பாராட்டைப் பதிவு செய்தார். அதன் பிறகு மாணவர்களுக்குப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தமிழ்த் துறை இரண்டாம் ஆண்டு மாணவி கஸ்தூரி முதலமைச்சர் கபடி போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றதைப் பாராட்டிப் பதக்கம் அணிவித்துச் சிறப்பு செய்தார். ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு மாணவர் கதிரேசன் அவர்கள் 30 வினாடிகளில் 65 முறை கயிறு குதிக்கும் போட்டியில் சாதனை செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்கிற புத்தகத்தில் இடம் பிடித்ததைப் பாராட்டிப் பதக்கம் அணிவித்தார். இறுதியில் தமிழ்நாடு அரசின் சட்டமன்றத் துணைச் செயலாளர் இராஜேந்திரன் அவர்கள் நன்றியுரை வழங்க, மாணவியரின் நாட்டுப்பண்ணோடு விழா இனிதே நிறைவு பெற்றது. அதன் பிறகு குறுங்காடு திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரக்கன்று நடும் நிகழ்வில் தமிழ்நாடு அரசின் சட்டமன்றக் கொறடா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டனர். அதற்கு அடுத்த நாள் 22 12 2023 அன்று கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய மாணவர்களுக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்வுகளைக் கல்லூரி முதல்வர் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நிகழ்த்தினார்.

Share with your fiends...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *