புத்தக வெளியீட்டு விழா – 07.08.2019
Department of Tamil
Held On: 07-08-2019
Description :
ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வழி புத்தக வெளியீட்டு விழா ஈரோடு வி.பி.வி.மஹாலில் நடைபெற்றது.
ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வழி புத்தக வெளியீட்டு விழா ஈரோடு வி.பி.வி.மஹாலில் நடைபெற்றது. 07.08.2019 அன்று நண்பகல் விழாவில் மிக மூத்த பெரியாரியவாதியாகத் திகழ்ந்து பொதுவுடைமைத் தளத்தில் மிக காத்திரமாக இயங்கி வருபவருமான மதிப்பிற்குரிய எஸ்.வி.ராஜதுரை அவர்கள் கலந்து கொண்டு காரல் மார்க்ஸ் குறித்தான படைப்பாக்கப் பின்புலத்தையும் நடப்புக் கால சமூகச்சூழலையும் எதார்த்தமாகப் பதிவு செய்தார். காரல் மார்க்ஸை தமிழ்ச்சூழலில் கம்யூனிசம் அறிக்கை வழி அடையாளப்படுத்திய தந்தை பெரியாரின் கோட்பாட்டுத் தேவையையும் கார்ல் மார்க்ஸின் பொதுவுடைமை சித்தாந்த வழிகாட்டுதலையும் விளக்கி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஏராளமான புதுச் சித்தாந்தங்களைத் தாங்கி வகை வகையான நூல்களை மிக விரைவாக வெளியிடவேண்டும். ஈரோடு புத்தகத் திருவிழா போன்று அறிவுச் செல்வங்களை பரவலாக்கம் செய்கின்ற வாய்ப்பு எதிர்காலத்தில் இல்லாமல் போகலாம்.எனவேதான் கருத்துப் பரிமாற்றத்தை இளையோரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். 25 நூல்களை வேளாளர் கல்லூரி நிறுவனத் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் வெளியிட சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.கமலக்கண்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
Leave a reply