முப்பெரும் விழா – 06.08.2019
Department of Tamil
Held On: 06-08-2019
Description :
சிக்கய்ய நாயக்கர் கல்லூரித் தமிழ்த்துறை திராவிட இயக்க ஆய்வு மய்யம் இணைந்து நடத்திய தமிழ்த்துறை - பொன் விழா மற்றும் மேனாள் மாணவரைப் போற்றும் விழா மற்றும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா என முப்பெரும் விழா நடைப்பெற்றது,
சிக்கய்ய நாயக்கர் கல்லூரித் தமிழ்த்துறை திராவிட இயக்க ஆய்வு மய்யம் இணைந்து நடத்திய தமிழ்த்துறை – பொன் விழா மற்றும் மேனாள் மாணவரைப் போற்றும் விழா மற்றும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா என முப்பெரும் விழா நடைப்பெற்றது, இவ்விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப,கமலக்கண்ணன் வரவேற்புைர ஆற்றினார். முன்னாள் கல்லூரி மாணவரும் செங்குந்தர் பொறியியல் கல்லூரி தாளாளர் திரு,சிவானந்தம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாவலர் அறிவுமதி கலந்துக் கொண்டார்.
@ 3000 ஆண்டு பழங்கால தமிழை, சங்க இலக்கியத்தை ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
@ தொல் தமிழர்களின் வாழ்வானது இயற்கையோடு இயைந்த வாழ்க்கை என எடுத்துரைத்தார்,
@ ஆய்வு மாணவர்கள் கவிதை மட்டுமல்ல, திரைப்படப் பாடல்களையும் கொண்டு ஆய்வு செய்தல் வேண்டும்.
@ திரைப்படப்பாடல்களிலும் இலக்கிய நயம் உண்டு, அதற்கு நெறியாளர்களும் உறுதுணையாக இருத்தல் வேண்டும்,
@ கவிதை உருவாகும் விதம் குறித்து விவரித்துக் கூறினார்.
பொன் விழா கொண்டாடும் தமிழ்த்துறைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் பாவலர் அறிவுமதி தமிழ்த்துறை நிகழ்விற்கு வருவது இது மூன்றாவது முறை . மேலும் மேனாள் மாணவர்கள் சார்பாக பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் முனைவர் செ,சதீஸ்குமார் ஏற்புரை வழங்கினார், மூன்றாமாண்டு மாணவர் திரு,சி.பிரகாஷ் நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், முனைவர் சி.அங்கயற்கண்ணி, முனைவர் சா.சிவமணி, முனைவர் அர.ஜோதிமணி, பேரா.க,இராக்கு, முனைவர் ந.மணிகண்டன், முனைவர் இரா,விஸ்வநாதன், அழைப்புப் பேராசிரியர் திருமதி ப,பூமீஸ்வரி, திரு.மு.சதீஸ்குமார் மற்றும் பிற துறை பேராசிரியர்கள் மற்றும் திராவிட கழக முன்னோடி திரு.சண்முகம், மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பத்திரிக்கை நண்பர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விழா சிறக்க ஏற்பாடுகள் செய்த ஆய்வு மாணவர்கள், இளங்கலை மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுகள்! நன்றிகள்.!
Leave a reply