UG Admission 2021 – 2022
Before applying online, the candidates have to pay the application fee of Rs.50/- through RTGS/Net Banking/any UPI mode to the Account details given below and Please note the UTR Number/Transaction ID after paying the application fee and mention the UTR Number/Transaction ID in the application. The application fee for SC/ST students is Rs. 2/- only.
இணைய வழியாக விண்ணப்பிக்கும் முன்னர் விண்ணப்பதாரர் ரூ.50/- மட்டும் விண்ணப்பக் கட்டணமாக கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்திய பின்னர் பணம் செலுத்தியமைக்கான பரிமாற்ற எண் / யூ.டி.ஆர். எண்ணைத் தவறாமல் குறித்து வைத்துக்கொண்டு அதனை விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட வேண்டும். SC/ST மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 2/- மட்டுமே செலுத்த வேண்டும்.
Name | CNC Non Salary, Joint Director Of Collegiate Education, Coimbatore |
---|---|
A/c No | 450922374 |
Bank Name | Indian Bank |
Branch Name | Erode Main |
IFSC Code No | IDIB000E008 |
Required Documents
(Maximum file size for each document – 1 MB)
- Passport size photo in JPG/JPEG/PNG format.
கடவுச்சீட்டு அளவு புகைப்படம் - Plus two (XII) mark statements / result downloaded in JPG/JPEG/PNG format.
மேல்நிலை வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்/தேர்வு முடிவு இணைய பதிவிறக்கச் சான்று. - Community certificate in JPG/JPEG/PNG format
சாதிச்சான்று - Transfer Certificate in JPG/JPEG/PNG format
முந்தைய கல்வி நிலையத்தின் மாற்றுச் சான்று
General Instructions
- The applicant who is willing to apply for more than one programme shall have to file separate application for each programme.
ஒரு பாடப்பிரிவுக்கு மேல் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவியர் ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். - Admission is purely based on Government’s Communal Reservation Norms and Admission Regulations.
அரசு நிர்ணயித்துள்ள நெறிகாட்டுதலின்படி இனவாரி ஒதுக்கீட்டு அடிப்படையிலும் அரசு விதிகளின்படியும் சேர்க்கை நடைபெறும். - Provide the correct academic information and communication details for further communications. Applications with incomplete and incorrect information will be rejected.
கல்வி மற்றும் தொடர்பு முகவரி போன்றவற்றிற்கு சரியான தகவல்களை தகுந்த இடங்களில் நிரப்பவும். தவறான மற்றும் முழுமை பெறாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். - The application can be filled in Tamil or English.
விண்ணப்பத்தினைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் நிரப்பலாம். - Students who have already received application from the College office must apply through online. (For any doubt, contact the numbers given below)
ஏற்கனவே கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்றுள்ள மாணவ, மாணவியர் கட்டாயம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.(இது தொடர்பான சந்தேகங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்) - Applications can be submitted through online mode only on or before (To Be Announced). The application received after (To Be Announced) will be considered late application.
இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் : (To Be Announced). அதற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் தாமத விண்ணப்பங்களாகக் கருதப்படும். - List of selected candidates for admission will be given proper intimation through the communication details provided by the candidates.
சேர்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவியர் தாங்கள் அளித்துள்ள தொடர்பு விபரங்கள் மூலம் தெரிவிக்கப்படுவார்கள். - After successful completion of the online application, you will receive an Email with Application in pdf format. This is only for your reference. Applicants need not send any hard copies to the college.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, மின்னஞ்சலில் விண்ணப்பத்தினை pdf கோப்பாக பெறுவீர்கள். இது தங்களுடைய குறிப்பிற்காக மட்டுமே. விண்ணப்பதாரர் எந்த நகல்களையும் கல்லூரிக்கு அனுப்பத் தேவையில்லை.
If there is any doubt in filling the application or for any assistance contact:
இணைய வழியாக விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் உதவிக்கு அழைக்கவும்:
9443517659, 8825419319, 9790559424, 8838600609, 0424-2291271